GD-இல் ஒரே கணினி வழித் தேர்வு: ஒரு மணி நேரம், பத்தாம் வகுப்பு நிலையில் 80 வினாக்கள். அதன் பிறகு ஓட்டமும் அளவீடுகளும், மருத்துவப் பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு. ஓட்டத்துக்கு யார் அழைக்கப்படுவது முதல் எந்தப் படை கிடைக்கும் என்பது வரை எல்லாவற்றையும் உங்கள் தேர்வு மதிப்பெண் (NCC கூடுதல் மதிப்பெண்ணுடன்) முடிவு செய்கிறது. GD 2026 அறிவிப்பின்படி தேர்வு முறை இது.

கணினி வழித் தேர்வு

பகுதி

பாடம்

வினாக்கள்

மதிப்பெண்

A

பொது நுண்ணறிவு, தர்க்க அறிவு

20

40

B

பொது அறிவு, பொது விழிப்புணர்வு

20

40

C

அடிப்படைக் கணிதம்

20

40

D

ஆங்கிலம் அல்லது இந்தி

20

40

மொத்தம்

80

160

  • நேரம்: முழு வினாத்தாளுக்கும் 60 நிமிடம்.

  • மதிப்பெண்: ஒரு வினாவுக்கு 2; ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.25 கழிக்கப்படும்.

  • நிலை: பத்தாம் வகுப்பு. கணிப்பான் (calculator) அனுமதி இல்லை.

  • மொழி: ஆங்கிலம், இந்தி, மேலும் 13 மொழிகள், தமிழ் உட்பட.

  • NCC கூடுதல் மதிப்பெண்: "C", "B", "A" சான்றிதழுக்கு 8, 4.8, 3.2 மதிப்பெண் சமன்செய்த மதிப்பெண்ணுடன் சேர்க்கப்படும்.

குறைந்தபட்சத் தேர்ச்சி மதிப்பெண்

NCC கூடுதல் மதிப்பெண் இல்லாமல், ஓட்டத்துக்குப் பரிசீலிக்கப்படக் குறைந்தபட்சம்:

பிரிவு

குறைந்தபட்சம்

160-க்கு

பொதுப் பிரிவு (UR)

30%

48

OBC, EWS

25%

40

மற்ற பிரிவினர்

20%

32

தேர்விலிருந்து தேர்வு வரை

  1. ஓட்டமும் அளவீடுகளும்: தேர்வு மதிப்பெண்ணின்படி, மாநில வாரியாக, பிரிவு வாரியாக, ஆண்–பெண் தனித்தனியாக, ஒரு காலியிடத்துக்கு ஏறத்தாழ எட்டுப் பேர் அழைக்கப்படுவர். தரங்களுக்குப் பார்க்க GD தகுதி.

  2. மருத்துவப் பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு: ஓட்டத்திலும் அளவீட்டிலும் தேறியவர்களில், மீண்டும் தேர்வு மதிப்பெண்ணின்படி, ஒரு காலியிடத்துக்கு ஏறத்தாழ இருவர் அழைக்கப்படுவர்.

  3. இறுதித் தேர்வும் படையும்: தேர்வு மதிப்பெண் (NCC கூடுதலுடன்), விண்ணப்பத்தில் நீங்கள் தந்த ஏழு படைகளின் விருப்ப வரிசை ஆகியவற்றின்படி, ஒவ்வொரு மாநிலம், பிரிவு, பாலினத்துக்கும் தனியாக.

  4. சமநிலை வந்தால் பகுதி A மதிப்பெண், பிறகு பகுதி B, பிறகு பகுதி C, பிறகு பிறந்த நாள் (வயதில் மூத்தவர் முதலில்), பிறகு பெயரின் அகர வரிசை.

பாடத்திட்டம்

பொது நுண்ணறிவு, தர்க்க அறிவு: பெரும்பாலும் படம் சார்ந்தவை: ஒப்புமை, ஒற்றுமை–வேற்றுமை, இடஞ்சார்ந்த காட்சிப்படுத்தல், திசையறிவு, காட்சி நினைவு, பகுத்தறிதல், கூர்ந்து நோக்கல், தொடர்புக் கருத்துகள், எண்கணிதத் தர்க்கம், படங்களை வகைப்படுத்தல், எண், படத் தொடர்கள், குறியீடு–குறிவிலக்கம்.

பொது அறிவு, பொது விழிப்புணர்வு: சுற்றுச்சூழல் அறிவு, நடப்பு நிகழ்வுகள், அன்றாட அறிவியல், இந்தியாவும் அண்டை நாடுகளும்: விளையாட்டு, வரலாறு, பண்பாடு, புவியியல், பொருளாதாரம், அரசியல், அரசியலமைப்பு, அறிவியல் ஆய்வு. எந்தப் பாடத்தையும் சிறப்பாகப் படிக்கத் தேவையில்லாத வினாக்கள் என்று அறிவிப்பு சொல்கிறது.

அடிப்படைக் கணிதம்: எண் முறைகள், முழு எண்கள், தசம எண்கள், பின்னங்கள், அடிப்படைச் செயல்கள், சதவீதம், விகிதம், விகிதசமம், சராசரி, வட்டி, லாபம்–நட்டம், தள்ளுபடி, அளவியல், நேரம்–தூரம், நேரம்–வேலை.

ஆங்கிலம் அல்லது இந்தி: அடிப்படை ஆங்கிலம் அல்லது இந்தியைப் புரிந்துகொள்ளும் திறன், எளிய பத்திப் புரிதல்.

தேர்வு முறை சொல்வது என்ன

ஒவ்வொரு மதிப்பெண்ணும் இரண்டு முறை கணக்கில் வருகிறது: ஓட்டத்துக்கு அழைக்கப்படுவதற்கும், பிறகு இறுதிப் பட்டியலில் உங்கள் இடத்துக்கும். 60 நிமிடத்தில் 80 வினாக்கள், தவறான விடைக்குக் கால் மதிப்பெண் மட்டுமே இழப்பு என்பதால் வேகம் முக்கியம்; இரண்டு விடைகளுக்குள் சுருக்க முடிந்தால் ஊகித்து எழுதுவது பயன் தரும். எங்கள் திட்டம்: GD-க்கு எப்படித் தயாராவது. தமிழ்நாட்டுக் கட்-ஆஃப்: GD கட்-ஆஃப்.

ஆதாரம்: SSC தேர்வு அறிவிப்பு, Constable (GD) in CAPFs and SSF, and Rifleman (GD) in Assam Rifles Examination, 2026 (1 டிசம்பர் 2025), பத்திகள் 12, 14, 15, ssc.gov.in.

‹ SSC GD காவலர்

SSC GD காவலர்: மேலும்

பிழையைத் தெரிவிக்கவும்

இந்தப் பக்கத்தில் பிழை உள்ளதா?

உங்கள் பெயர், மின்னஞ்சல் எதுவும் சேமிக்கப்படாது.