வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS), பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை உதவியாளர்களை (எழுத்தர்கள்) தேர்ந்தெடுக்கும் CRP CSA-XVI அறிவிப்பை 1 ஆகஸ்ட் 2026 அன்று வெளியிட்டது. இது 2027–28 காலியிடங்களுக்கானது. முக்கிய நாள்கள், வங்கிகள், காலியிடங்கள் (தமிழ்நாட்டுக்கானவை உட்பட), ஊதியம், கட்டணம், தேர்வு மொழி, தமிழ்நாட்டுத் தேர்வு மையங்கள் ஆகியவற்றை IBPS அறிவிப்பின்படி இங்கே காணலாம்.

முக்கிய நாள்கள்

நிகழ்வு

நாள்

இணைய வழிப் பதிவும் கட்டணமும்

1 முதல் 21 ஆகஸ்ட் 2026 வரை

முதல்நிலைத் தேர்வு (இணைய வழி)

அக்டோபர் 2026 (தோராயமாக)

முதல்நிலைத் தேர்வு முடிவு

நவம்பர் 2026 (தோராயமாக)

முதன்மைத் தேர்வு (இணைய வழி)

டிசம்பர் 2026 (தோராயமாக)

வங்கிகளுக்கு ஒதுக்கீடு

மார்ச் 2027 (தோராயமாக)

இவை அறிவிப்பில் உள்ள தோராயமான நாள்கள்; சரியான நாள்களை IBPS ibps.in தளத்தில் அறிவிக்கும்.

வங்கிகளும் காலியிடங்களும்

பதினொரு வங்கிகள் பங்கேற்கின்றன: பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & சிந்த் வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா.

காலியிடங்கள் மாநில வாரியானவை; ஒரு மாநிலத்தின் காலியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 29 செப்டம்பர் 2026 IBPS புதுப்பித்த பட்டியலில் இந்தியா முழுவதும் 11,663 காலியிடங்கள் (யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தன் எண்ணிக்கையைத் தரவில்லை). தமிழ்நாட்டுக்கு 698:

வங்கி

SC

ST

OBC

EWS

UR

மொத்தம்

இந்தியன் வங்கி

75

2

111

29

128

345

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

13

1

29

6

28

77

பேங்க் ஆஃப் பரோடா

12

1

16

7

37

73

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

15

0

23

4

19

61

பஞ்சாப் நேஷனல் வங்கி

11

0

16

6

27

60

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா

7

0

10

4

19

40

யூகோ வங்கி

6

0

7

2

11

26

பஞ்சாப் & சிந்த் வங்கி

0

0

2

0

4

6

பேங்க் ஆஃப் இந்தியா

1

0

1

1

2

5

கனரா வங்கி

0

1

1

0

3

5

மொத்தம்

140

5

216

59

278

698

இவை தோராயமான காலியிடங்கள்: வங்கிகள் தெரிவிக்கும் உண்மையான காலியிடங்களின்படியே ஒதுக்கீடு நடக்கும்; பட்டியல் மாறலாம்.

ஊதியம்

வாடிக்கையாளர் சேவை உதவியாளரின் அடிப்படை ஊதியம் ₹24,050-இல் தொடங்கிப் படிப்படியாக ₹64,480 வரை உயரும்; சேரும் வங்கியின் படிகளும் சலுகைகளும் உண்டு.

கட்டணம்

₹850 (GST உட்பட); SC, ST, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு ₹175.

தேர்வு மொழி: தமிழும் உண்டு

தமிழ்நாட்டுக் காலியிடங்களுக்கு, ஆங்கில மொழித் தேர்வு தவிர மற்ற தேர்வுகள் ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகியவற்றில் வரும்; விண்ணப்பத்திலேயே தேர்வு செய்ய வேண்டும். புதுச்சேரிக்குத் தெலுங்கு, மலையாளமும் உண்டு.

மொழித் தேர்வு

தமிழ்நாட்டுக் காலியிடத்தைப் பெறத் தமிழைப் படிக்க, எழுத, பேச, புரிந்துகொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு (அல்லது அதற்கு மேல்) மதிப்பெண் சான்றிதழில் தமிழ் படித்ததாக இருந்தால் தேர்வு தேவையில்லை; இல்லையெனில் முதன்மைத் தேர்வுக்குப் பிறகு, பணியில் சேரும் முன் மொழித் தேர்வு நடக்கும்; அதில் தோற்றால் பணி வழங்கப்படாது.

தமிழ்நாட்டுத் தேர்வு மையங்கள்

தேர்வு

தமிழ்நாட்டு மையங்கள்

முதல்நிலை

சென்னை, கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில்/கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர்

முதன்மை

சென்னை, கோயம்புத்தூர், கடலூர், மதுரை, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்

உங்கள் மாநிலத்துக்கு வெளியே IBPS மையம் ஒதுக்கலாம்; அப்போதும் நீங்கள் விண்ணப்பித்த மாநிலத்துக்கே பரிசீலிக்கப்படுவீர்கள்.

யார் விண்ணப்பிக்கலாம் என்பதை IBPS எழுத்தர் தகுதி பதிவிலும், இரண்டு தேர்வுகளை IBPS எழுத்தர் தேர்வு முறை, பாடப்பகுதிகள் பதிவிலும், படிப்புத் திட்டத்தை IBPS எழுத்தர் தேர்வுக்கு எப்படித் தயாராவது பதிவிலும் காணலாம்.

ஆதாரம்: IBPS, Notification for CRP CSA-XVI (1 ஆகஸ்ட் 2026), Corrigendum with updated vacancies (29 செப்டம்பர் 2026), ibps.in.

‹ IBPS எழுத்தர்

IBPS எழுத்தர்: மேலும்

பிழையைத் தெரிவிக்கவும்

இந்தப் பக்கத்தில் பிழை உள்ளதா?

உங்கள் பெயர், மின்னஞ்சல் எதுவும் சேமிக்கப்படாது.